×

விதை பரிசோதனை நிலையத்தில் அதிகாரி ஆய்வு

திருச்சி, நவ.7: விதைச்சான்று இணை இயக்குநர் ராஜேந்திரன் நேற்று திருச்சி விதைப் பரிசோதனை நிலையத்தின் பணிகளை ஆய்வு செய்தார். விதை பரிசோதனை அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ள பெரம்பலூர், விழுப்புரம், கரூர் மற்றும் புதுக்கோட்டை விதை பரிசோதனை நிலையங்களில் உள்ள அலுவலர்கள் விபரங்கள் மற்றும் காலிப்பணியிடம் பற்றிய விபரங்களை ஆய்வு செய்தார். விதைகளின் தரத்தை நிர்ணயிக்க கூடிய முக்கிய காரணிகளான முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை மற்றும் பிற ரக கலப்பு ஆகியன எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதையும் அதற்குரிய உபகரணங்களின் பயன்பாடுகள் பற்றி தெரிவித்தார். 2,116 விதை மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு ஆய்வறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளது என்றும், விதைப் பரிசோதனை நிலையத்தில் சான்று விதை, ஆய்வாளர் விதை, மற்றும் பணிவிதை மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு உடனுக்குடன் ஆய்வு அறிக்கைகள் உரியவருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்ற விவரத்தை தெரிவித்தார். விதைச்சான்று இணை இயக்குநர் விதை முளைப்பு திறன் அறையை பார்வையிட்டு, கிடைக்கப் பெற்றுள்ள விதை மாதிரிகளிலிருந்து முளைப்புத் திறன் கணக்கிடும் முறையில் இயல்பான நாற்று, இயல்பற்ற நாற்று, கடின விதை, மற்றும் உயிர்ப்பற்ற விதைகள் பகுப்பாய்வு செய்யும் முறையை பார்வையிட்டார். விதை மாதிரிகளை சீரிய முறையில் பகுப்பாய்வு செய்து நல் விளைச்சலுக்கு விவசாயிகள் நலன் கருதி தரமான விதைகளே விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்ற தெரிவித்தார்.ஆய்வின்போது அலுவலர் லீமாரோஸ், உதவி இயக்குநர் அறிவழகன், வேளாண் அலுவலர் முத்துசெல்வி உள்பட பலர் உடனிருந்தனர்.


Tags : Inspection ,Seed Testing Station ,
× RELATED தஞ்சை மாவட்ட நீர்நிலைகளில்...