மனைவியுடன் தகராறு கணவன் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி, நவ. 7: திருச்சி உறையூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல்(40), பெயிண்டர். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் தீபாவளி முடிந்து வேலைக்கு செல்வதாக கூறிய வெற்றிவேல் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் மனைவி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெற்றிவேல் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: