×

உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக தலைமையில் ஆலோசனை

கீழக்கரை, நவ.7:  கீழக்கரையில் உள்ளாட்சி தேர்தலில் எவ்வாறு நடந்து கொள்வதென்று தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. திமுக நகர் செயலாளர் பசீர் அகமது தலைமை வகித்தார். துணை செயலாளர்கள் ஜமால்பாருக், கென்னடி, வார்த்தக அணி தலைவர் நயினார், செயலாளர் ஜகுபர், மாணவர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் மற்றும் நிர்வாகிகள் இப்திகார் ஹசன், கெஜி, மணிகண்டன், ஆறுமுகம், அமீர், தவ்பீக்ராஜா, அப்துல்காதர், பாஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் ஹமீதுகான் வரவேற்றார். இதில் வரு இருக்கின்ற ஊள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு அனைவரும் நடப்பதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் முஸ்லிம் லீக் நகர் செயலாளர் ஹபீப் முகம்மது தம்பி, ம.ம.க நிர்வாகி முஜிபுர்ரஹ்மான், வி.சி.க யாசின், ம.தி.மு.க அப்துல் ஹக் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,elections ,
× RELATED மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகம் மீட்போம் திமுக பொதுக்கூட்டம்