×

நிறுத்தத்தில் நிற்காத அரசு பேருந்துகள் பொதுமக்கள் புகார்

மண்டபம், நவ.7:  சுத்தரமுடையான் பேருந்து நிறுத்தத்தில் அனைத்து அரசு பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் ஒன்றியம் சாத்தக்கோன்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட பால்குளம், அரியமான், தில்லை நாகச்சி குடியிருப்பு, பிள்ளைமடம், சுத்தரமுடையான், உடையார் வலசை, சீனியப்பா தர்ஹா ஆகிய பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் அனைவரும் சுத்தரமுடையான் பேருந்து நிறுத்தத்தில் இருந்து செல்ல வேண்டிய இடத்திற்கு பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ராமேஸ்வரம் இருந்து வரும் அரசு பேருந்துகள் அனைத்தும் சுத்தரமுடையான் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்வதில்லை. இதேபோல் ராமநாதபுரத்தில் இருந்து வரும் அரசு பேருந்துகளும் சுத்தரமுடையான் பேருந்து நிறுத்தத்தில் நிற்பது கிடையாது. இதனால் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருந்து பேருந்தில் பயணம் செல்ல வேண்டிய நிலை உள்ளாத பொதுமக்கள் கூறுகின்றனர். ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரத்தில் இருந்து வரும் அரசு விரைவு பேருந்துகளை தவிர அனைத்து பேருந்துகளும் வேதாளை, சுத்தரமுடையான் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என போக்குவரத்து கழகம் உத்தரவு இருந்தும்  ஒரு சில பேருந்துகளை தவிர மற்ற அனைத்து பேருந்துகளும் நின்று செல்வதில்லை. இதனால் பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் முதியவர்கள் பெண்கள் என அனைவரும் நீண்டநேரம் வெயில் மற்றும் மழையில் காத்திருந்து பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டி நிலையுள்ளது.

மேலும் ஒரு சில நேரங்களில் அரசு பேருந்துகள் நிற்பது இல்லை. இதனால் பொதுமக்கள் தனியார் பேருந்தில் அதிக கட்டணம் செலுத்தி செல்ல வேண்டியுள்ளதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகமும் அரசு போக்குவரத்து கழகமும் சுத்தரமுடையான் பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சுத்தரமுடையானை சேர்ந்த முனியசாமி கூறுகையில், சுத்தரமுடையான் பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகளும் நிற்பது கிடையாது. இதனால் நாங்கள் நீண்டநேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது. மேலும் பேருந்துகளில் சுத்தரமுடையான் பேருந்து நிறுத்தத்திற்கு பயண சீட்டு எடுத்து வந்தாலும் பேருந்துகளை நிறுத்துவது கிடையாது. டிரைவரிடம் தகராறு செய்து தான் பேருந்தை நிறுத்த வேண்டிய நிலையுள்ளது. இதானல் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags :
× RELATED அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீது...