×

இளைஞர் திருவிழா போட்டி புதூர் கிங்ஸ் பள்ளி சாம்பியன்

வள்ளியூர், நவ. 7:  வள்ளியூர்  சென்ட்ரல் ரோட்டரி  கிளப் சார்பில், வள்ளியூர் யுனிவர்சல் பொறியியல்  கல்லூரியில் இளைஞர் திருவிழா கலைப்போட்டிகள் நடந்தது. இதில் 12 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கலை, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. புதூர் கிங்ஸ் பள்ளி மாணவர்கள் பாட்டுப்போட்டியில் ஜூனியர் பிரிவில்  முதலிடமும், ஓவியப் போட்டிகளில் ஜூனியர் பிரிவில் முதலிடமும்,  பரதநாட்டியம், நாட்டுப்புற மற்றும் மேற்கத்திய நடனத்தில் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் முதலிடமும் பிடித்தனர். மேலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்களை  பள்ளி தலைவர் காலின்வேக்ஸடாப், தாளாளர் நவமணி, பள்ளி முதல்வர் பிரடெரிக்  சாம் ஆகியோர் பாராட்டினர்.

Tags : Youth Festival Competition Budur Kings School Champion ,
× RELATED விஸ்வநாதநகர் குடியிருப்போர் நலச்சங்க கூட்டம்