×

பேராவூரணி அருகே நடந்த சாலை விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது

பேராவூரணி, நவ. 7: பேராவூரணி அருகே தனியார் பள்ளி வேனும், பைக்கும் மோதிய விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்ததுபுதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வடிவேல் மகன் வைரவேல் (14). இவரும் இதே பகுதியை சேர்ந்த ரவி மகன் முகேஷ் (14) என்பவரும் நெடுவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்துக்கு செருவாவிடுதியில் புதிய கட்டிடம் கட்டும் இடத்துக்கு கடந்த 2ம் தேதி சென்றனர். பின்னர் அங்கு கொத்தனார் வேலை பார்த்து வரும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வல்லத்தரசு என்பவருடன் 3 பேரும் ஒரே பைக்கில் நெடுவாசல் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு தனியார் பள்ளி வேனும், பைக்கும் மோதிய விபத்தில் மாணவர் வைரவடிவேல், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மற்றொரு மாணவரான முகேஷ், கொத்தனார் வல்லத்தரசு ஆகியோரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் கொத்தனார் வல்லத்தரசு சிகிச்சை பலனின்றி 3ம் தேதி இறந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முகேஷ் நேற்று இறந்தார். இதனால் சாலை விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

Tags : Road accidents ,Peravurani ,
× RELATED சொந்த ஊர் நடந்து செல்லும் வழியில்...