×

அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற வாலிபர் கைது

திருக்காட்டுப்பள்ளி, நவ. 7: திருக்காட்டுப்பள்ளி அருகே அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.திருக்காட்டுப்பள்ளி அருகே விஷ்ணம்பேட்டை மணல்மேட்டு பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் நேற்று திருக்காட்டுப்பள்ளி சப்இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஒருநபர் வீட்டின் பின்புறம் மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை செய்ததில் விஷ்ணம்பேட்டை மணல்மேடு வடக்குத்தெரு மதிவாணன் மகன் பெரியசாமி (28) என்பதும், அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து பெரியசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags :
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே கள்ளச்சாராயம்...