மாவட்ட அளவிலான திறன் போட்டிகள்

சேலம், நவ.7:சேலம் மாவட்ட அளவிலான திறன்போட்டிகளில் கலந்து கொள்ள, தகுதிவாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான திறன் போட்டிகள், 2021ம்  ஆண்டு செப்டம்பர் மாதம் சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் நடக்கிறது. இந்த போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக, சேலம் மாவட்ட அளவிலான தொடக்க நிலை திறன் போட்டிகள் நடக்கவுள்ளது. 6 துறைகளில் உள்ள 47 திறன் பிரிவுகளில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க, தகுதிவாய்ந்தவர்கள் https://worldskillsIndia.Co.in/worldskill/world/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

Advertising
Advertising

இதற்கான கடைசிநாள் வரும் 25ம் தேதியாகும். 5ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் மற்றும் படித்து கொண்டிருப்பவர்கள், தொழிற் பயிற்சி நிலையம், தொழிற் பயிற்சி பள்ளி, தொழில் நுட்ப கல்லூரி, பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள், படித்துக் கொண்டிருப்பவர்கள், தொழிற் சாலையில் பணியில் உள்ளவர்கள் குறுகிய கால தொழிற்பயிற்சி பெற்றவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு, சேலம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலரை 94990 55827 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இத்தகவலை மாவட்ட உதவி இயக்குநர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: