×

திமுக சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கல்

இடைப்பாடி, நவ.7:இடைப்பாடி அருகே கோனசமுத்திரம் ஊராட்சியில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கபட்டது. இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் ஒன்றியத்தில், கோனசமுத்திரம் ஊராட்சியில் திமுக சார்பில் கன்னியாம்பட்டி மற்றும் 5க்கும் மேற்பட்ட இடங்களில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் கொங்கணாபுரம் சுப்ரமணியம் தலைமை வகித்தார். கொங்கணாபுரம் பேரூர் செயலாளர் அர்த்தநாரீஸ்வரன், கோனசமுத்திரம் முன்னாள் ஊராட்சி தலைவர் கந்தன், கொங்கணாபுரம் அருணாசலம், தங்கவேலு, செல்வம், வெங்கடாசலம், சின்னபையன், சடையன், கவுதமன், மோகன், சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

Tags :
× RELATED கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு