×

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் குறித்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 9ம் தேதி நடக்கிறது

பெரம்பலூர், நவ.7: பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட் டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக் கைகளின் மீது உடனுக்கு டன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகா ம் நடைபெற்று வருகிறது.அதன்படி, பெரம்பலூர் தாலுகா, எளம்பலூர் கிராமத்தில், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையின நல அலுவலர் விஜயன் தலைமையிலும், குன்னம் தாலுகா, அகரம் சீகூர் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர் வோர் பாதுகாப்பு அலுவ லர் கங்காதேவி தலைமை யிலும், வேப்பந்தட்டை தாலுகா, தொண்டமாந்து ரை(மேற்கு) கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மஞ்சுளா தலை மையிலும், ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் கிராமத்தில் பொது விநி யோகத்திட்ட துணைப்பதி வாளர் செல்வராஜ் தலை மையிலும் வரும் (9ம்தேதி) சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.முகாமில் பொது மக்கள் கலந்துகொண்டு உணவுப்பொருள் வழங்கல். குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்துப் பயனடையலாம் எனத் தெரிவித்தார்.
Tags : district ,Perambalur ,
× RELATED மக்களின் குறைகளுக்கு தீர்வு காண...