வீரகனூர் பேரூராட்சியில் டெங்கு விழிப்புணர்வு பணி

கெங்கவல்லி, நவ.7: கெங்கவல்லி தாலுகா வீரகனூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. பேரூராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை, சேலம் மாவட்ட வட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தியாகராஜன் நேற்று ஆய்வு செய்தார்.

Advertising
Advertising

அவர் பேரூராட்சியில் உள்ள 11,12,13 வார்டுகளில் உள்ள வீடுகளில் மேல்நிலை தொட்டி, சின்டெக்ஸ் டேங்க், பேரல் உள்ளிட்ட தண்ணீர் தொட்டிகளில் டெங்கு கொசுக்கள் உள்ளதா என ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும், வீட்டின் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி, துண்டுபிரசுரங்களை வழங்கினார். அப்போது, வீரகனூர் பேரூராட்சி செயல் அலுவலர் காதர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories: