×

பாடாலூரில் சமூகவிரோத செயல்களின் கூடாரமாக மாறிவரும் உணவு விடுதி கட்டிடம் நடவடிக்கை எடுக்கப்படுமா?

பாடாலூர், நவ. 7: ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள உணவு விடுதி கட்டிடம் சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக விளங்கி வருகிறது.கடந்த காலங்களில் 15 ஆண்டுகளுக்கு முன் அரசு போக்குவரத்து கழகம் மூலம் கன்னியாகுமரி முதல் சென்னை வரை சாலையோர உணவு விடுதிகளுக்காக கட்டிடங்கள் கட்டப்பட்டு அந்த உணவு விடுதிகள் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு அதன்மூலம் சாலையோர உணவு விடுதிகள் நடத்தப்பட்டு வந்தன. அதேபோல் ஆலத்தூர் தாலுகா பாடாலூரிலும் உணவு விடுதி நடத்தப்பபட்டு வந்தது. இந்த உணவு விடுதிகளில் தொலைதூரம் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகள் சாப்பிட்டு சென்றனர். ஆனால் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அதுபோல் நடத்தப்பட்டு வந்த உணவு விடுதிகள் கைவிடப்பட்டன.இந்நிலையில் பாடாலூர் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள அந்த உணவு விடுதி கட்டிடத்தில் விரும்பத்தகாத சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. எனவே அந்த கட்டிடத்தை புதுப்பித்து மீண்டும் சாலையோர உணவு விடுதி நடைபெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : restaurant building ,
× RELATED கொரோனா வைரஸின் கூடாரமான சென்னை :...