×

உரிமம் இல்லாமல் விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை

பெரம்பலூர், நவ.7: பெரம்பலூர் மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் விதை விற்பனை செய்வோர் கண்டறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குநா் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.திருச்சி விதை ஆய்வு துணை இயக்குன கண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் விவசாயிகள் பல்வேறு பயிர்களை பயிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விதைகளை வாங்கும் விவசாயிகள் விதையின் ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள் மற்றும் பருவம் ஆகியவற்றை சரி பார்த்து வாங்க வேண்டும்.உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் தாங்கள் விற்பனை செய்யும் விதையின் மேற்கண்ட விபரத்தை விற்பனை ரசீதில் குறிப்பிட்டு விவசாயியின் கையொப்பம் மற்றும் விற்பனையாளா் கையொப்பத்துடன் வழங்க வேண்டும். இதில் ஏதேனும் குறை காணப்பட்டால் விதை விற்பனையாளா் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும். உரிமம் இல்லாமல் விற்பனை செய்தாலோ, காலாவதியான விதைகளை விற்பனை செய்தாலோ, விற்பனை ரசீது தர மறுத்தாலோ விதை ஆய்வு துணை இயக்குனனர் அலுவலக தொலைபேசி எண்ணான 0431-2420587 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம். விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் புகார் அடிப்படையில் விசாரணை செய்து விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Tags : sellers ,
× RELATED கலெக்டர் அறிவுறுத்தல் நியாய...