×

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு குறும்படம் வெளியிட கலெக்டர் உத்தரவு

பெரம்பலூர், நவ.7:பெரம்பலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவி களிடையே டெங்கு குறித்த விழிப்புணர்வு குறும்படங்களை திரையிட மாவட்ட கலெக்டர் சாந்தா உத்தரவு பிறப்பித்துள்ளார்.பெரம்பலூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் அதிக மாகப் பரவும் டெங்கு உள் ளிட்ட பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றது.மேலும் பொதுமக்களிடையே டெங்கு உள்ளிட்ட நோய் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்திடும் வகையில் பொது சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள், செய்தித்துறை மற்றும் கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறுபகு திகளிலும் விழிப்பணர்வு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.அதனடிப்படையில் டெங்கு காய்ச்சல் பரவும் முறைகள் குறித்தும் அதனை கட்டுப் படுத்த மேற்கொள்ள வேண் டிய நடவடிக்கைகள் குறித்தும், டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்ப ட்டால் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் குறி த்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அதிநவீன மின்னணு திரை வாகனத்தின் மூலமாக தமிழ்நாடு அர சின் சார்பில் தயாரிக்கப்ப ட்ட விழிப்புணர்வு குறும்பட ங்கள் பொதுமக்களிடையே திரையிட்டு காட்டப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப் பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழி ப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் நவம்பர் 5ம் தேதி, 6ம்தேதிகளில் பெரம்ப லூர் அரசுமேல்நிலைப் பள் ளி வளாகத்திலும், ரோவர் மேல்நிலைப் பள்ளி வளா கத்திலும் டெங்கு விழிப்பு ணர்வுகுறும்படங்கள் திரை யிடப்பட்டன.தமிழக அரசின் உத்தரவுப் படி, குக்கிராமங்களிலும் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத் திடும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறை யின் அதிநவீன மின்னனு திரை வாகனத்தின் மூலமாக பகல் வேளைகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடை யேயும், மாலை வேளைகளில் குக்கிராமங்களிலும் திரையிடப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.


Tags : college students ,school ,
× RELATED இன்ஸ்டாகிராம் நட்பால் விபரீதம்:...