×

பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்

கரூர், நவ. 7: கரூர் மாவட்டம் சோமூர் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுககு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம், இயற்கை வளம் காப்போம் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு மரக்கன்றுகள் வழங்கி, பள்ளி வளாகம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.தனியார் அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை மல்லிகா தலைமை வகித்தார். ஆசிரியை விஜயா முன்னிலை வகித்தார். அறக்கட்டளை நிறுவனர் ரவிச்சந்திரன், தனியார் நிறுவன ஒருங்கிணைப்பாளர் ரம்யா, பள்ளி ஆசிரியர் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இந்த நிகழ்வினை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கி பள்ளி வளாகத்தில் நடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : School Children ,
× RELATED திருச்சி மாநகரில் இன்றும், நாளையும் குடிநீர் சப்ளை நிறுத்தம்