×

ஏஐடியூசி கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர், நவ. 7: கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் ராஜன் தலைமை வகித்தார். ஏஐடியூசி மாவட்ட குழு உறுப்பினர் சந்திரசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாரதிதாசன், மாநில துணைத்தலைவர் பால்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அகில இந்திய குடிமக்கள் பதிவேடு வேண்டாம், குடியுரிமை மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Tags : AITUC ,protests ,
× RELATED தேசிய மீன்வள கொள்கையை ரத்து...