5,175 பேருக்கு கோழிக்குஞ்சுகள் வழங்க திட்டம் விண்ணப்பித்து பயன் பெற அழைப்பு

கரூர், நவ.7: கரூர் மாவட்டத்தில் ஊரக புறக்கடை கோழி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் 5175பேருக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட உள்ளது.ஊரகபகுதிகளில் ஏழைப்பெண்களுக்கு ஊரக கோழி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அசல் நாட்டின கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது, இத்திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் ஊராட்சிஒன்றியங்களுக்கும் முதல்கட்டமாக தலா 200பயனானிகள் வீதம் 1600பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரூ.3,750 மதிப்பிலான 50 அசல் நாட்டுக்கோழி குஞ்சுகளும், பாதுகாப்பாக பராமரிக்க ரூ.,2,500 மதிப்பிலான கூண்டும் தரப்பட்டுள்ளது. மேலும் கோழியினை எவ்வாறு முறையாக வளர்ப்பது என்பது குறித்து விளக்கும்வகையில் அந்தந்த பகுதி கால்நடை மருத்துவர்களால் ஒருநாள்பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு பயனாளிக்கும் தலா ரூ.150ஊக்கத் தொகையும், விளக்க கையேடும் வழங்கப்படுகிறது.

கோழிஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் ஊரக புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின்கீழ் கரூர் மாவட்டத்தில் 5175 பயனாளிகளுக்கு அசல்நாட்டுக் கோழி குஞ்சுகள் வழங்கிட கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளிலும் ஒவ்வொருஒன்றியத்திற்கும் 500பயனாளிகள் வீதம் 4000 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படஉள்ளது.தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டத்தில் மக்கள் பங்கேற்புடன் கண்டறியப்பட்ட ஏழைகளின் பட்டியல்களில் உள்ளவர்கள் சொந்தகிராமத்தில் நிலையாக வசித்து வரவேண்டும். கறவை பசுக்கள், இலவச வெள்ளாடுகள், செம்மறியாடுகள் கோழிகள் முந்தைய ஆண்டுகளில் பயன்பெற்றவராக இருக்கக்கூடாது. ஆதரவற்ற பெண்கள், விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளின்படி ஆதிதிராவிட, பழங்குடியின பெண் பயனாளிகள் 30சதவீதம் தேர்வு செய்யப்படுவர்.பேரூராட்சிகளில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பட்டியல் எண் வைத்திருக்கும் பெண் பயனாளிகளில் சிறப்புநிலை எனில் 50பேரும், தேர்வுநிலை எனில் 75பேரும், பேரூராட்சி நிலை1 107பேரும், நிலை2 எனில் 125பயனாளிகள் தேர்வுசெய்யப்பட உள்ளது. தேர்வு செய்யப்படும் பெண் பயனாளிகளுக்கு 25 அசில் நாட்டுரக கோழிக்குஞ்சுகள் வழங்கப்படஉள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED புதிதாக மீட்டர் பொருத்தியும்...