கடவூர் ஒன்றியத்தில் 20 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

கடவூர், நவ.7:கடவூர் ஒன்றியத்தில் 20 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது.கடவூர் ஒன்றியத்தில் கடவூர், முள்ளிப்பாடி, பாலவிடுதி, செம்பியநத்தம், மாவத்தூர், ஆதனூர், தேவர்மலை, மேலப்பகுதி, கீழப்பகுதி, தரகம்பட்டி, வாழ்வார்மங்கலம், தென்னிலை, கீரனூர், வெள்ளப்பட்டி, பண்ணப்பட்டி, பாப்பயம்பாடி, வடவம்பாடி, மஞ்சாநாயக்கன்பட்டி, வரவணை, காளையபட்டி ஆகிய ஊராட்சிகளில் அந்த அந்த ஊராட்சி செயலர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 100 நாள் பணியாளர்களுக்கு அடுத்த பணிகள் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.கூட்டத்தில் பிடிஓ கனகராஜ், ஏ.பி.டிஓ. பரமேஸ்வரன் மற்றும் பற்றாலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Sabha ,meeting ,panchayats ,
× RELATED பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில்...