×

வடிகால் வசதி செய்யாமல் கழிவுநீர் தேக்கத்தினால் தோல் நோய் ஏற்பட்டு மக்கள் அவதி கண்டுகொள்ளாத அதிகாரிகள்

கரூர், நவ.7: வடிகால் வசதி செய்யாமல் கழிவுநீர் தேக்கத்தினால் தோல்நோய் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.கரூர் வேலாயுதம்பாளையத்தில் பைபாஸ்சாலை அமைவதற்கு முன்னர் வள்ளுவர்நகரில் இருந்து வெளியேறும் சாக்கடைநீர் சுந்தராம்பாள் நகரில்உள்ள தனியார் நிலத்தின் வழியாக வெளியேறியது. பைபாஸ் சாலை அமைக்கப்பட்டு மேம்பாலம் கட்டப்பட்டது. சாக்கடைநீர் செல்லாதவாறு தடுப்புசுவர் கட்டப்பட்டது. இதனால் கழிவுநீர்வெளியேற வழியின்றி வள்ளுவர்நகர் பகுதியில் குளம்போல தேங்கி நிற்கிறது. மழைக்காலங்களில் மேம்பாலம் பகுதியில் இருந்து வரும் மழைநீரும் கலந்துவிடுகிறது. இதனால் கழிவுநீர் வீடுகளுக்குள்புகுந்துவிடுகிறது.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனுஅளித்தும் நடவடிக்கை இல்லை. பல போராட்டங்களை நடத்தியும் பயன் இல்லை. அந்த சமயத்தில் வந்து அதிகாரிகள் சாக்கு போக்கு சொல்விட்டுப் போய்விடுகின்றனர். தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் ஒருபகுதியிலும், பேரூராட்சி சார்பில் ஒருபகுதியிலும் வடிகால் கட்டித்தர ஒப்புக்கொள்ளப் பட்டு குறிப்பிட்ட தூரத்திற்கு பணி நடைபெற்று பின்னர் பணிகள் நடைபெறவில்லை. கொசுத்தொல்லையால் தோல் நோய்கள் ஏற்பட்டு குடியிருப்போர் அவதிப்படுகின்றனர். தற்போது உள்ளாட்சித்தேர்தல் வர இருக்கிறது. உள்ளாட்சி மன்றங்களில் தற்போது மக்கள்பிரதிநிதிகள் இல்லை என்பதால் இந்த தேர்தலில் இப்பிரச்னை எதிரொலிக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.


Tags :
× RELATED 3 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்