×

இரவு நேரங்களில் முன்னறிவிப்பின்றி மின்தடையால் மக்கள் கடும் அவதி கண்காணித்து சீரமைக்க வலியுறுத்தல்

கரூர், நவ. 7: கரூர் மாவட்ட கிராமப்புற பகுதிகளில் முன்அறிவிப்பு இன்றி இரவு நேரங்களில் மின் தடை செய்யப்படுவது குறித்து கண்காணித்து சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் மாவட்டம் சோமூர், திருமுக்கூடலூர், கோயம்பள்ளி போன்ற கிராமங்கள் சூழ்ந்த பகுதியில் அவ்வப்போது முன் அறிவிப்பு இன்றி இரவு நேரங்களில் மின் தடை செய்யப்படுவதால் கிராமப்புற மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.துணை மின்நிலைய பகுதிகளில் இருந்து மாதம் ஒரு முறை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், அதையும் மீறி கிராமப்புற பகுதிகளில் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் மின் தடை செய்யப்படுவதால் பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.இரவு நேரங்களில் கொசுக்களால் தொந்தரவு போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் மின்தடை காரணமாகவும் மக்கள் அவஸ்தைப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, கிராமப்புற பகுதிகளில் அவ்வப்போது நடத்தப்படும் மின்தடை குறித்து கண்காணித்து சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED சிறுமிகள் கராத்தே பயிற்சி பெறுவது அவசியம்: எஸ்.பி.இலக்கியா வலியுறுத்தல்