பஸ்சில் ஜேப்படி செய்தவர் கைது

திருச்செங்கோடு, நவ.7: திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் அருகில் சில்லி சிக்கன் கடை நடத்தி வருபவர் நடராஜன்(39). இவர் நேற்று மாலை, ஈரோடு செல்ல பஸ்சில் ஏறியுள்ளார். அப்போது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒரு நபர், நடராஜன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பணத்தை நைசாக எடுத்துள்ளார். அதை கண்ட நடராஜ் சத்தம் போடவே, சக பயணிகள் ஜேப்படி செய்த நபரை வளைத்து பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் சேலம் தாதகாப்பட்டி மூணாங்கரட்டை சேரந்த பழனிசாமி(27) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது  செய்து திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி சௌம்யா மேத்யூ உத்தரவிட்டார்.

Tags :
× RELATED பஸ்சில் ஜேப்படி செய்தவர் கைது