புதன்சந்தையில் ஆடுகள் விலை உயர்வு

சேந்தமங்கலம், நவ.7: மிலாடி நபியை முன்னிட்டு, புதன்சந்தையில் நேற்று ஆடுகள் விலை உயர்ந்தது. நாமக்கல் அடுத்த புதன்சந்தையில் வாரந்தோறும் கூடும் ஆட்டுச்சந்தைக்கு, சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆடுகள், குட்டிகள், கிடாக்கள் விற்பனைக்கு வரும். இதனை வாங்க நாமக்கல், சேந்தமங்கலம், எருமப்பட்டி, பவித்திரம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வருவார்கள்.

மாவட்டத்தில் தற்போது தொடர் மழை பெய்து, தீவன தட்டுப்பாடின்றி கிடைப்பதால், வளர்ப்பு ஆடுகளை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  நேற்று கூடிய சந்தைக்கு, அதிக ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. மிலாடி நபியை முன்னிட்டு  இறைச்சி ஆடுகளின் தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்தது. கடந்தவாரம் 4,800க்கும் விற்கப்பட்ட 10 கிலோ எடை கொண்ட இறைச்சி, இந்த வாரம் 5 ஆயிரத்துக்கு விற்பனையானது. அதுபோல் 4,500க்கு விற்பனையான வளர்ப்பு ஆடுகள் 4,700க்கும், பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குட்டி ஆடு 1000க்கும், கிடா குட்டி 1,200க்கும் விற்பனையானது.

Tags :
× RELATED புதன்சந்தையில் ஆடுகள் விலை உயர்வு