×

சேந்தமங்கலம் அருகே மலைப்பாம்பு பிடிபட்டது

சேந்தமங்கலம், நவ.7:சேந்தமங்கலம் அடுத்துள்ள ராமநாதபுரம்புதூர் மாசிளாம்மன் கோயில் பகுதியை சேர்ந்த விவசாயி சரவணன்(40). இவரது தோட்டத்தில் நேற்று, 6 அடி நீள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது.  இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், இதுகுறித்து நாமக்கல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், நாமக்கல் வனசரகர் ரவிச்சந்திரன் தலைமையிலான வனக்காப்பாளர்கள் விஜயபாரதி, பாலசுப்ரமணியம் மற்றும் ஊழியர்கள், சம்பவ இடத்துக்கு வந்து மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர், கொல்லிமலை மலைச்சாலையில் உள்ள 22வது கொண்டை ஊசி வளைவு காப்புக்காட்டில் விடுவித்தனர்.

Tags : Sendhamangalam ,
× RELATED சேந்தமங்கலத்தில் விவசாயி தற்கொலை