×

மின்கசிவால் குடிசையில் தீ

ஆத்தூர், நவ.7: ஆத்தூர் நகராட்சி வடக்குகாடு உப்போடை பகுதியை சேர்ந்தவர் மணி(34) கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிரியா(28). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்று மாலை மணி வேலைக்கு சென்று விட்ட நிலையில், பிரியா வீட்டை பூட்டி விட்டு குழந்தையுடன் அருகில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டு, சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தது. இதில் திடீரென மின்கசிவு ஏற்பட்டதில், மணியின் குடிசை வீடு தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. தகவலின் பேரில், விரைந்து வந்த ஆத்தூர் தீயணைப்பு வீரர்கள், 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் குடிசை முழுவதும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த பணம், பத்திரங்கள், நகைகள் உள்ளிட்ட ₹3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.

Tags : Minakshiwal ,hut ,
× RELATED கொள்ளிடம் அருகே பரபரப்பு பஸ்...