×

அதிக உறுப்பினர்கள் சேர்ப்பு மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

திருச்செங்கோடு, நவ.7: திமுக இளைஞர்அணி உறுப்பினர் சேர்க்கையில், முதன்முதலில் அதிக உறுப்பினர் சேர்த்த நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ மற்றும் இளைஞரணி நிர்வாகிகளுக்கு, மாநில திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கும் மேலாக, இளைஞர் அணியில் புதிதாக உறுப்பினர்களை அவர்கள் சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Udayanidhi Stalin ,executives ,DMK ,
× RELATED உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா