சாராயக்கடையில் மோதல்: 4 பேர் கைது

காரைக்கால், நவ. 7: காரைக்கால் நிரவி விழிதியூர் கிராமத்தில் சாராயக்கடை உள்ளது. இங்கு நாகை மாவட்டம் பேரளம் பகுதியை சேர்ந்த புகழேந்தி (34), அவரது நண்பர் மணிகண்டன் (30) ஆகிய 2 பேரும் சாராயம் குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள கடைகளில் சைடீஸ் பொருட்கள் சரியில்லை என சண்டை போட்டுள்ளனர்.இதனால் கடைக்காரர்களுக்கும், அவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த விழிதியூர் கிராமத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (24), அஜித் (22), பேட்டை சரவணன் (22), அருள்மொழித்தேவன் பகுதியை சேர்ந்த உதயக்குமார் (24)) ஆகிய 4 பேர் தட்டிக்கேட்டபோது மோதல் உண்டானது. தொடர்ந்து 4 பேரும் சேர்ந்து 2 பேரை தாக்கினர். இதில் காயம் அடைந்த 2 பேரும் நிரவி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் நிரவி போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: