×

சவுக்கு தோப்பில் இறந்து கிடந்த மான்

காலாப்பட்டு, நவ. 7: புதுவை காலாப்பட்டு அடுத்த தமிழகப் பகுதியான மாத்தூரில் பல ஏக்கரில் முந்திரி, சவுக்கு விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் அதிக அளவில் மான்கள், மயில்கள் உள்ளன. இந்நிலையில் அங்குள்ள சவுக்கு தோப்பு ஒன்றில், பெரிய மான் ஒன்று மர்மமான முறையில் நேற்று இறந்து கிடந்தது. அதிகாலையில் அந்த வழியாக சென்றவர்கள், இதனை பார்த்து விட்டு, கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சரவணன், தனிப்பிரிவு அதிகாரி முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர், விழுப்புரம் வனத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். நாய்கள் விடாமல் துரத்தி துரத்தி கடித்ததில் மான் இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து, உடற்கூறு பரிசோதனைக்காக மானை வனத்துறையினர் மீட்டு சென்றனர்.Tags : grove ,
× RELATED மேலூர் பகுதியில் நாய்கள் கடித்து குதறியதால் 2 புள்ளி மான்கள் பலி