×

குடிபோதையில் தகராறு: 2 பேர் கைது

திருபுவனை, நவ. 7: மதகடிப்பட்டு வாரச்சந்தையில் குடிபோதையில் தகராறு செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மதகடிப்பட்டில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையில் சந்தை நடைபெறுவது வழக்கம். சுற்றுப்பகுதிகளில் இருந்து ஏராளமானோர் காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு இங்கு வருவார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் சந்தை நடைபெற்று வந்த நிலையில், குடிபோதையில் அங்கு வந்த கோர்க்காடு அய்யனார் கோயில் பகுதியை சேர்ந்த தாமஸ் மகன் சூசைராஜ் (39), கோபாலன்கடை மாரியம்மன் கோயில் தெரு தட்சிணாமூர்த்தி மகன் வேலு (29) ஆகியோர் சந்தைக்கு வந்த பெண்களிடம் தகராறு செய்துள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED சொத்து பிரச்னையில் ஏற்பட்ட மோதல்:...