×

தேன்கனிக்கோட்டை அருகே இந்து கடவுள் படங்களை எரித்த பாதிரியார் கைது

தேன்கனிக்கோட்டை, நவ.7:  தேன்கனிக்கோட்டை அருகே இந்து கடவுள் படங்களை எரித்த பாதிரியாரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தேன்கனிக்கோட்டை அருகே எஸ்.குருபட்டி கிராமத்தைச் சேரந்த விவசாயி முத்துராஜ்(32). கடந்த ஆண்டு கிறிஸ்தவராக மதம் மாறிய இவர், கிராமத்தில் உள்ள தேவாலயத்திற்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், தனது வீட்டில் இருந்த இந்து கடவுள் படங்களை, பாதிரியார் ஜான்பிரிட்டோவிடம் முத்துராஜ் கொடுத்ததாக கூறப்படுகின்றது. அதை கடந்த இருதினங்களுக்கு முன், பாதிரியார் தீயிட்டு எரித்துள்ளார்.

இதுகுறித்து, கிராம மக்கள் இந்து அமைப்புகளிடம் இடம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, இந்து முன்னணி நிர்வாகி மாதேஷ், இந்து கடவுள் படங்களை எரித்த பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தேன்கனிக்கோட்டை டிஎஸ்பியிடம் புகார் செய்தார். அதன் பேரில், விசாரணை மேற்கொண்ட டிஎஸ்பி சங்கீதா, பாதிரியார் ஜான்பிரிட்டோ(59)வை நேற்று கைது செய்தார். பின்னர், தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாதிரியார் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : priest ,Thenkanikottai ,God ,
× RELATED கொரோனாவுக்காக மனிதரை நரபலி கொடுத்த...