×

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு

போச்சம்பள்ளி, நவ.7: கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டடோர் பிரிவு தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் ராபிக்ஜமால், உமர்பாஷா, காதர் ஆகியோர், நேற்று கலெக்டர் பிரபாகரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், பர்கூர் ஒன்றியம், குள்ளம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாதிநாயக்கன்பட்டி பகுதியில் கடந்த 40 வருடங்களாக அரசு நிலத்தில் 30 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். அனைவரும் கூலி தொழில் செய்து வருகிறோம். எங்களுக்கு பட்டா கேட்டு  பல முறை மனு கொடுத்துள்ளோம். ஆனால், இதுவரை வழங்கவில்லை. எனவே, இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

Tags :
× RELATED நிவாரண உதவி வழங்க அரசு மேற்கொள்ள...