×

கூழாங்கல் கடத்திய லாரி பறிமுதல்

உளுந்தூர்பேட்டை,  நவ. 7: உளுந்தூர்பேட்டை அருகே பச்சைவெளிக்குப்பம் கிராமத்தில் விழுப்புரம்  மாவட்ட கனிமவளத்துறை அலுவலர் சுந்தர்ராமன்(29) தலைமையிலான குழுவினர் தீவிர  வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை மடக்கி  சோதனை செய்ததில் அதில் அரசு அனுமதியின்றி கூழாங்கல் கடத்தி சென்றது  தெரியவந்ததுள்ளது. இதனை தொடர்ந்து அந்த லாரியை பறிமுதல் செய்து  உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. கூழாங்கல் கடத்தலில்  ஈடுபட்டு தப்பி ஓடிய நடியப்பட்டு கிராமத்தை சேர்ந்த சரண்ராஜ், காங்கிருப்பு  பகுதியை சேர்ந்த தங்கதுரை ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED லால்குடி அருகே மூட்டை மூட்டையாக...