×

பைக் விபத்தில் முதியவர் பலி

கள்ளக்குறிச்சி, நவ. 7:    கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (70)  விவசாயி ஆவார். சம்பவத்தன்று இவர் மொபட்டில் கள்ளக்குறிச்சியில்  இருந்து தென்கீரனூர் கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்த செந்தில்(33) என்பவர் ஓட்டிவந்த பைக் ராமசாமியின் மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராமசாமி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பலனின்றி இறந்தார. இதுகுறித்து  அவரது மகள் செல்வி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி சப்இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகிறார்.


Tags : bike accident ,
× RELATED பைக் திருடி ஆன்லைனில் விற்றவர் கைது