×

ரிஷிவந்தியம் அருகே பைக் மீது லாரி மோதி தொழிலாளி பலி

ரிஷிவந்தியம், நவ. 7: ரிஷிவந்தியம் அருகே பெரியகொள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன் (55). இவருக்கு விவசாய கூலி வேலை செய்து வரும் இவர் நேற்று மாலை பெரியகொள்ளியூரிலிருந்து பகண்டை கூட்டு சாலைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அத்தியூர் அருகே உள்ள சென்றபோது பின்னால் வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் தலையில் அடிபட்டு வீரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பகண்டை கூட்டு சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED மின் ஊழியர் பலி