கீழ்புளியங்குடி மயானத்துக்கு செல்ல பாதை வசதி

முஷ்ணம், நவ. 7: முஷ்ணம் அருகே கீழ்புளியங்குடி கிராமத்தில் பல ஆண்டுகளாக மயானத்திற்கு செல்லும் பாதையின்றி தனியார் நிலங்களில் கடந்து சடலத்தை அடக்கம் செய்து வந்தனர். இதேபோல், நேற்று முன்தினம் மூதாட்டி ஒருவரின் சடலத்தை பாதை வசதியின்றி தனியார் பட்டா நெல் வயலில் இறங்கி எடுத்து சென்றனர். இது தொடர்பாக செய்தி தினகரன் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக முஷ்ணம் வட்டாட்சியர் புகழேந்தி, வருவாய் ஆய்வாளர் கோவிந்தன், கிராம நிர்வாக அலுவலர் பானுகோபன் மற்றும் பணியாளர்கள் கீழ்புளியங்குடி மயான இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தனியார் பட்டா விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மயானத்திற்கு பாதை வசதி பெற்றனர். இது குறித்து காட்டுமன்னார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வட்டாட்சியரின் நடவடிக்கையால் பல ஆண்டுகளாக மயான பாதையின்றி இருந்த கிராமத்திற்கு மயானபாதை அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. வட்டாட்சியரின் இந்த நடவடிக்கைக்கு கிராம

மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Stories: