×

பண்ருட்டி ரயில்வே மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலையை அகலப்படுத்த டிஆர்ஓவிடம் அனைத்து கட்சி மனு

பண்ருட்டி, நவ. 7: பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன் நேற்று முன்தினம் ஆய்வுக்கு வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திமுக நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில், காங்கிரஸ் நகர தலைவர் முருகன், பாமக மாவட்ட அமைப்பு செயலாளர் கோதண்டபாணி, இந்திய கம்யூ. மாவட்ட செயலாளர் துரை, பாஜக நகர செயலாளர் செல்வகுமார், விசிக நகர செயலாளர்கள் கார்த்திக், கிருஷ்ணராஜ் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு
கொடுத்தனர். அந்த மனுவில், சென்னை சாலை ரயில்வே மேம்பாலத்திற்கான சர்வீஸ் சாலை பணிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. சர்வீஸ் சாலைக்கான அளவுகள் குளறுபடியால் மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் அவ்வழியாக 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், ஆட்டோ மற்றும் பள்ளி மாணவர்கள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சர்வீஸ் சாலைக்கான சரியான அளவை எடுத்து அகலமாக சாலை அமைக்க வேண்டும். மேலும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு சர்வீஸ் சாலை பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அப்போது வட்டாட்சியர் உதயகுமார், சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் பூபாலசந்திரன், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.


Tags : TRO ,service road ,railway bridge ,Panruti ,
× RELATED பைபாஸில் பயணிகள், பக்தர்களை...