×

லாரி மோதி வாலிபர் பரிதாப பலி

கடலூர், நவ. 7: கடலூர் முதுநகர் செல்லங்குப்பம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகையன். இவரது மகன் குணசேகர்(20). ஐடிஐ முடித்த இவர் சிறு,சிறு வேலைகள் செய்து வந்தார்.நேற்று மதியம் தன் பைக்கில் வீட்டிற்கு சாப்பிட சென்றார். முதுநகர் சாலக்கரை மார்க்கெட் கமிட்டி எதிரில் சென்றபோது எதிரே தரங்கம்பாடியில் இருந்து புதுச்சேரிக்கு காலி சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் சக்கரம் ஏறியதால் உடல் நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.விபத்து குறித்த தகவல் அறிந்த முதுநகர் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் சவப்பரிசோதனைக்கு  உட்படுத்தினர்.இந்த விபத்து குறித்து முருகையன் கொடுத்த புகாரின் பேரில் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Victim ,Larry Mothi ,
× RELATED ரோடு போட்ட 10 நாளில் ஜல்லி பெயர்ந்த அவலம்