×

விஏஓவுக்கு கொலை மிரட்டல்

வேப்பூர், நவ. 7: வேப்பூர் அருகிலுள்ள நல்லூர் கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2மணல் கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.வேப்பூர் அருகிலுள்ளது நல்லூர் ஊராட்சி. இங்கு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ஐவதுகுடி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் ராஜி (36). நல்லூர் அருகிலுள்ள வண்ணாத்தூர் ஊராட்சிக்கும் இவர்தான் கிராம நிர்வாக அலுவலராக உள்ளார். வண்ணாத்தூர் கிராமத்தை சேர்ந்த காளிதாஸ் கிராம உதவியாளராக பணிபுரிகிறார்.  ராஜி, காளிதாஸ் இருவரும் வண்ணாத்தூர் ஊராட்சியில் உள்ள மணிமுக்தாற்றில் லாரியில் மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலின்பேரில் ஆற்றுக்கு சென்றனர். அப்போது அங்கு மணல் ஏற்றி கொண்டு நின்றிருந்த லாரி அருகே சென்றபோது லாரிக்குள் அமர்ந்திருந்த விருத்தாசலம் தாலுகா கச்சிபெருமாநத்தம் கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் சிவசங்கரமூர்த்தி (35), என்பவரும், அருகில் அமர்ந்திருந்த கோனான்குப்பம் பகுதியை சேர்ந்த  காமராஜ் மகன் பிரகாஷ் (26) என்பவரும் விஏஓ ராஜி, உதவியாளர் காளிதாஸ் ஆகியோரை திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து விஏஓ ராஜி வேப்பூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசங்கரமூர்த்தி, பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.Tags : VAO ,
× RELATED தென்காசியில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கொடிக்குறிச்சி VAO கைது