வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு விடப்படும்

கடலூர், நவ. 7: கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசு வேளாண் பொறியியல் துறை மூலம் உழுவை இயந்திரங்கள் சுழல் கலப்பை, கல்டிவேட்டர், வேளாண் கழிவுகளை துகளாக்கும் இயந்திரம் போன்ற துணை கருவிகளுடன் விவசாயிகளுக்கு மணிக்கு ரூ.340 என்ற வீதத்தில் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.மரம் அறுக்கும் இயந்திரம் ஒரு மணிக்கு ரூ.85 என்ற வாடகை வீதத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கடலூர் மாவட்டத்தில் 10 உழுவை இயந்திரங்கள், 150 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 6 வேளாண் கழிவுகளை துகளாக்கும் இயந்திரங்கள் உள்ளது.

எனவே, மேற்கண்ட உழவு கருவிகளை  வாடகைக்கு பெற விரும்பும் ஆர்வமுள்ள கடலூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் சின்னகங்கணாங்குப்பம், கடலூர், சிதம்பரம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், 135, வடக்கு தேர் வீதி, பூதக்கேணி, சிதம்பரம், விருத்தாசலம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், சிதம்பரம் ரோடு, பூதாமூர்(அஞ்சல்), விருத்தாசலம் ஆகிய அலுவலகங்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.


Tags :
× RELATED வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு...