×

கடத்தூர் அருகே கிடப்பில் போடப்பட்ட சாலை சீரமைப்பு பணி

கடத்தூர், நவ.7: கடத்தூர் அருகே கேத்துரெட்டிப்பட்டியில் சாலை சீரமைப்பு பணி கிடப்பில் போடப்பட்டதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடத்தூர் அடுத்த கேத்துரெட்டிப்பட்டி ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இறப்பவர்களை, கேத்துரெட்டிப்பட்டியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில், மயானத்திற்கு செல்லும் சாலை பழுதடைந்து இருந்ததால், சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் ேபரில், சாலை சீரமைப்பு பணி தொடங்கியது. ஜல்லிக்கற்கள் ெகாட்டிய நிலையில், பணிகளை கிடப்பில் போட்டு விட்டனர். இதனால், வேப்பிலைப்பட்டி, கேத்துரெட்டிப்பட்டி, அண்ணா நகர், சவுளுகொட்டாய் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kadathur ,
× RELATED கடத்தூர் பகுதியில் மின்னல் வேகத்தில்...