×

கோல்டன் கேட்ஸ் பள்ளியில் சந்தை பொருட்காட்சி

பாப்பிரெட்டிப்பட்டி, நவ.7: பாப்பிரெட்டிப்பட்டி அருகே பையர்நத்தம் பகுதியில் அமைந்துள்ள கோல்டன் கேட்ஸ் மெட்ரிக்பள்ளியில், சந்தை பொருட்காட்சி நடந்தது. சந்தையில் பொருட்கள் வாங்குவதும், விற்பதும் குறித்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். வியாபாரிகளிடம் பேரம் பேசுவது குறித்தும், சில்லரை வாங்குவதற்கான ஆளுமை திறமையையும் வெளிப்படுத்துமாறும், அச்சந்தை பொருட்காட்சி அமைத்தது. மிகப்பெரிய கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவதை விடவும், சந்தைக்கு சென்று பொருட்களை வாங்குவது சுவாரஸ்யமானதாக இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். அத்துடன் வாழ்வியல் நடைமுறை கணக்குகளுக்கு, செயல்பாடு அளிக்கும் வகையிலும் இப்பொருட்காட்சி அமைந்தது.

Tags : Market exhibition ,Golden Gates School ,
× RELATED தூத்துக்குடி கல்லூரியில் சந்தை கண்காட்சி கலெக்டர் துவக்கி வைத்தார்