×

மாவட்ட தலைவர் அழைப்பு உள்ளாட்சி தேர்தலுக்கு காங்கிரசில் விருப்ப மனு

தர்மபுரி, நவ.7: தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி.சிற்றரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. தேர்தல் நடத்த தயார் நிலையில் தேர்தல் ஆணையம் உள்ளதால், எல்லா அரசியல் கட்சியினரும், உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தொடங்கி விட்டார்கள். உள்ளாட்சி தேர்தல் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. எனவே, தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள காங்கிரஸ் கட்சியினர், வரும் 8ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 3 மணி வரை, மாவட்ட கட்சி அலுவலகத்தில் அதற்கான படிவத்தை இலவசமாக பெற்று அன்றே பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட வட்டார, நகர, பேரூராட்சி காங்கிரஸ் தலைவர்களிடம் புகைப்படத்துடன், விருப்ப மனு அளிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : District Leader ,Election ,
× RELATED தமிழகத்தில் 10ம், 12ம் வகுப்பு...