×

வாலிபரை பாட்டிலால் குத்தியவர் கைது

சோழவந்தான், நவ. 7: சோழவந்தான் அருகே, மது போதையில் வாலிபரை பாட்டிலால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர். செக்காணூரணியைச் சேர்ந்த கருணாநிதி மகன் கல்யாணசுந்தர் (24), கூலித் தொழிலாளி. இவர் சோழவந்தான் அருகே, மேலக்கால் வைகையாற்றில் நேற்று குளிக்கச் சென்றார். அப்போது மதுபோதையில் இருந்த பன்னியான் கிராமத்தை சேர்ந்த காசிவிஸ்வநாதன் (22), கல்யாணசுந்தரிடம் தகராறு செய்து மதுபாட்டிலால், அவரை பலமாக குத்தியுள்ளார். இதில், கல்யாணசுந்தருக்கு தலை, கையில் காயம் ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவு காசிவிஸ்வநாதனை கைது செய்தனர்.

Tags :
× RELATED கூடுவாஞ்சேரி அருகே வாலிபர் கழுத்து அறுத்து கொலை