×

டெங்கு தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு கசாயம் வழங்கல்

பேரையூர், நவ. 7: வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி, பேரையூரில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், டெங்கு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன்படி நகரில் உள்ள பஸ்நிலையத்தில் செயல் அலுவலர் துரைக்கண்ணு தலைமையில் மாணவ, மாணவியர், பயணிகள், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மேலும் உரல், தேங்காய் சிரட்டை, டயர் ஆகியவற்றில் மழைநீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.  இதையடுத்து தெருக்களில் டிரம், உரல்களில் இருந்த தண்ணீர் கொட்டி சுத்தம் செய்யப்பட்டது. பின், அபேட் மருந்து தெளித்து, கொசு மருந்து அடிக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் வீடுகள், தெருக்களை சுத்தமாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி அலுவலகர்கள், பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED புதுச்சேரியில் மின்விநியோகத்தை...