×

கொலை வழக்கில் தேடப்பட்டவர் நீதிமன்றத்தில் சரண்

மதுரை, நவ. 7: கொலை வழக்கில் தேடப்பட்ட ஒருவர் மதுரை நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே உள்ள காடனேரியைச் சேர்ந்தவர் குமார் (35). இவருக்கும், ஒரு பெண்ணுக்கும் ஏற்பட்ட தகராறில், கடந்த ஜூலை 3ல் குமார் கழுத்தை நெரித்து, லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். இந்த ெகாலை வழக்கில் டி.கல்லுப்பட்டி போலீசார் ஏற்கனவே இருவரை கைது செய்தனர்.இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக போலீசாரால் தேடப்பட்ட மதுரை, ஒத்தக்கடை நரசிங்கத்தைச் சேர்ந்த மகாராஜன் (51) என்பவர், மதுரை ஜேஎம் 6வது நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.  இவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் முத்துராமன் உத்தரவிட்டார்.

Tags : Saran ,
× RELATED திருமழிசையில் ரவுடி கொலை வழக்கில் மேலும் இருவர் கைது