×

குடியிருப்பு பகுதியில் மழைநீர் அகற்றம்

திருப்பரங்குன்றம், நவ. 7: தினகரன் செய்தி எதிரொலியாக, வைக்கம் பெரியார் நகரில் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழைநீரை அகற்றும் பணி நேற்று நடந்தது. திருப்பரங்குன்றம் தொகுதி சாமநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட வைக்கம் பெரியார் நகரில் குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இந்த இடத்தை திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ டாக்டர் சரவணன் நேரில் ஆய்வு செய்து, நீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இது குறித்து நேற்றைய தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து எம்.எல்.ஏ டாக்டர் சரவணன் பரிந்துரையின் பேரில் திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் உத்தரவின் பேரில், ஊராட்சி செயலர் கன்னன் மேற்பார்வையில், குடியிருப்பு பகுதிக்குள் சூழ்ந்திருக்கும் மழைநீரை மின்மோட்டார் மூலம், கண்மாய்க்குள் கடத்தும் பணி நடந்தும் வருகிறது. இதனால், இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags : Residential Area ,
× RELATED கொரோனா வார்டு கழிவுகள் குடியிருப்பு...