×

ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தையை மீட்க நவீன கருவி மதுரையில் செயல்விளக்கம்

மதுரை, நவ. 7: மதுரை பீபீகுளத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரஜாக் (51). இவர், ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தைகளை மீட்கும் கருவியை கடந்த ஆண்டு கண்டுபிடித்தார்.  ‘அம்ப்ரல்லா ரெஸ்க்யூ பேபி’ என்ற இக்கருவியில் தற்போது, குழந்தையை காயமின்றி மீட்கும் வகையில், முன்னதாக அவிழாத வகையிலான குறிப்பிட்ட முடிச்சிட்டு குழந்தையை தூக்குவதற்கான வசதியையும் கண்டறிந்துள்ளார். கலெக்டர் வினய் அனுமதியில் நேற்று மதுரை தெற்கு தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்களுக்கு இக்கருவியின் செயல்பாடுகளை காட்டினார். தாசில்தார் அனீஷ் சத்தார் முன்னிலையில் தனது கருவி மூலம் ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தையை காப்பாற்றுவது குறித்த செயல்முறை விளக்கத்தை செய்து காட்டினார்.

இது குறித்து அப்துல் ரஜாக் கூறுகையில், ‘ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தைகளை மீட்கும் இக்கருவி, குழந்தையின் காலுக்கு அடியில் சென்று குடைபோல விரிந்து, குழந்தையை மேலே கொண்டு வரும். நேஷனல் இன்னோவேசன் பவுண்டேசன் விஞ்ஞானி நாகராஜ் அழைப்பில், சுஜித்தைக் காப்பாற்ற மணப்பாறைக்கு தாமதமாகவே செல்ல முடிந்ததால், என் கருவியைப் பயன்படுத்த முடியவில்லை.  பைப் இணைப்பில், 3 டூவீலர் புட் ரெஸ்ட் மடக்கி விரியும் வகையில், பேரிங் பொருத்தி இக்கருவியை அமைத்துள்ளேன். சுவர் பகுதியில் பட்டு காயம்படாமல் மேலே தூக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தனியாக அவிழ்க்க முடியாத கயிற்றில் போடும் சுருக்கும் கண்டறிந்துள்ளேன். எனது, இந்த கருவியின் செயல்முறையை அனைவருமே பார்த்து ஏற்றுள்ளனர். ஆபத்தான தருணத்தில் குழந்தையை நிச்சயம் என் கருவியால் மீட்க முடியும்’’ என்றார்.

Tags : well ,
× RELATED பொதுசேவை வாகனங்களில் இருப்பிடம் கண்டறியும் கருவி