×

பழநியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை முயற்சி பொதுமக்கள் பீதி

பழநி, நவ. 7: பழநியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.பழநி பஸ்ஸ்டாண்ட் பின்புறம் பாளையம் குடியிருப்பு உள்ளது. இங்கு 200க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு இப்பகுதிக்கு வந்த மர்மநபர்கள், கார்த்திகா என்பவரது வீட்டின் ஜன்னலில் வைக்கப்பட்டிருந்த செல்போனை திருட முயன்றனர். இதனை பார்த்து கார்த்திகா கூச்சலிட்டதையடுத்து, கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.இதேபோன்று அப்பகுதியில் மேலும் 2 வீடுகளில் கொள்ளையர்கள் திருட முயன்றது தெரியவந்தது. தகவலறிந்து வந்த பழநி நகர் போலீசார் விசாரணை நடத்தினர். அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இப்பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : panic attacks ,Palani ,
× RELATED ஊரே கொரோனாவால் பீதியடைந்துள்ள...