×

திறனறிவு தேர்வு வெற்றியாளருக்கு உதவித்தொகையை உயர்த்த வேண்டும்

பழநி, நவ. 7: திறனறிவு தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென தேர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் 10ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவியருக்கு தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான தேர்வானது கடந்த நவ.3ம் தேதி நடந்தது. இந்த தேர்வு ஆப்ஜெக்டிவ் முறையில் நடைபெறுகிறது. இதில் முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு மீண்டும் பிரதான தேர்வு நடத்தப்படும். இந்த பிரதான தேர்வில் முதலிடம் பிடிக்கும் முதல் 466 பேருக்கு பிளஸ் 1, பிளஸ் 2 வரை மாதம் ரூபாய் 12 ஆயிரத்து 500ம், இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பயிலும்போது மாதம் ரூபாய் 2 ஆயிரம் வீதம் மத்திய அரசு வழங்குகிறது. இந்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென தேர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி கூறியதாவது, ‘இன்றைய கல்விக்கு ஆகும் செலவை கருத்தில்கொண்டு, திறனாய்வு தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கான உதவித்தொகையை ரூபாய் 3 ஆயிரம் என்ற விகிதத்தில் உயர்த்தி வழங்க மத்திய அரசு முன் வர வேண்டும்’ என்றார்.


Tags :
× RELATED திமுக பிரமுகர் கொலை குண்டர் சட்டத்தில் நான்கு பேர் கைது