நத்தம் அருகே மக்கள் தொடர்பு முகாமில் 30 மனுக்களுக்கு தீர்வு


நத்தம், நவ. 7: நத்தம் அருகே பரளி- தேத்தாம்பட்டியில் தமிழக அரசின் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அசோகன் தலைமை தாங்கினார். தாசில்தார் ராதாகிருஷ்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஜான்பாஸ்டின்டல்லஸ், வருவாய் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் சுரேந்திரன் வரவேற்றார். முகாமில் பட்டா நகல், பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 40 மனுக்கள் வரப்பெற்றது. இதில் 30 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டன. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. இதில் வருவாய்த்துறை அலுவலர்கள், பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Tags : NAM ,
× RELATED உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட காங்....