×

பழநியில் பாஸ்ட் புட், பார்களிலும் உணவு தரமில்லை?

பழநி, நவ. 7: பழநி நகரில் உள்ள பாஸ்ட் புட் கடை மற்றும் தனியார் பார்களில் சுகாதாரக்கேடான உணவுகள் விநியோகிப்பதாக புகார் எழுந்துள்ளது.கோயில் நகரான பழநியில் ஏராளமான ஹோட்டல்கள் உள்ளன. இங்கு சுகாதார குறைவான உணவுகள் விநியோகிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனடிப்படையில் உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் தனியார் ஹோட்டல்களில் திடீர் ரெய்டு மேற்கொண்டனர். அங்கு தயார் செய்யப்படும் உணவுப்பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். இந்நிலையில் பழநி பகுதியில் செயல்படும் பாஸ்ட் புட் கடைகள் மற்றும் தனியார் பார்களிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டுமென சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து பழநியை சேர்ந்த சமூகஆர்வலர் தங்கமுத்து கூறியதாவது, ‘பழநி நகரின் பல பகுதிகளில் பாஸ்ட் புட் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு உணவு தயாரிக்க பயன்படும் எண்ணெய்கள் மீண்டும், மீண்டும் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுகிறது. அதுபோல் பார்களில் கண்ணாடி டம்ளர்கள் சரிவர கழுவப்படுவதில்லை. பார்களில் திண்பண்டங்கள் போதிய அளவு சுகாதாரமானதாக இருப்பதில்லை. சிக்கன் போன்றவை உரிய சுகாதார முறைகளை பயன்படுத்தி தயாரிக்கின்றனர். உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் இதுபோன்ற கடைகளை ஆய்வு செய்வதே இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் நலன் காக்க பாஸ்ட் புட் கடைகள், பார்களில் ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்’ என்றார்.

Tags :
× RELATED ஆரோக்கியமான உணவு கொடுக்கிறோம் என்ற திருப்தி இருக்கு!